சித்தர்கள் இராச்சியம்

Image by siththarkal.com

Wednesday, February 2, 2011

காலம் உணர்த்திய நட்பு


நீண்ட நாட்களுக்கு பின் (திருமணத்திற்கு பின்)எனது தோழியைப் பற்றி மீண்டும் எழுதுவதில் மிகவும் சந்தோசப்படுகிறேன். 

ஏன் என்றால் நான் எழுதியது போல் திருமணத்திற்கு பின் நானும் என் தோழியை மறந்து விடுவேனோ என்ற பயம் கூட மனதிற்குள் இருந்தது.

ஆனால் பிரிவு தான் நல்ல உள்ளங்களை இணைக்கும் பாலம் என்று புரிந்து கொண்டேன்.

அன்றிலிருந்து இன்று வரை கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் என் இதயம் முழுதும் நிறைந்துள்ளார் என் தோழி.

எனக்கு அமைந்த கணவர் மிகவும் நல்லவர் எங்கள் நட்பை நன்றாக புரிந்து கொண்டு இன்று வரை எங்கள் நட்புக்கு தடை ஏதும் சொன்னதில்லை. 

இனிவரும் பதிவுகள் முந்தைய பதிவின் முடிவிலிருந்து தொடர்ந்து எழுதுவேன்.திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி.

அடுத்த ஒரு சந்தோசமான செய்தியோடு உங்களை சந்திக்கிறேன் அதுவரை காத்திருக்கவும். 












Friday, December 3, 2010

மனதைத் திறந்த அன்பு



பெண்களைப் பற்றி ஆண்கள் இன்றும் சொல்லும் ஒரே வார்த்தை "பெண்களைப்  புரிந்து கொள்ளவே முடியவில்லை" என்பது தான். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் என் அனுபவத்தில் பெண்ணின் மனது பெண்ணுக்கு தான் புரியும் என்பது முழுவதும் உண்மை.

பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் தான் ஆனால் இருக்கும் இடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேறுபட்டு இருக்கிறார்கள்..ஆனால் ஒரே விஷயத்தில் மட்டும் எந்த பெண்ணும் வேறுபட்டது இல்லை தனக்குரியவர்களை என்றும் யாருக்காகவும் விடுக்குடுத்ததில்லை.

எந்த ஒரு பெண்ணும் தனது கணவரை வேறு பெண்ணுக்கு விட்டு குடுத்தில்லை. ஆனால் அதே பெண் குடும்ப சூழ்நிலை என்று வரும் போது தனது தோழியை விட்டு பிரிவதைத்  தவிர வேறு ஏதும் செய்ததில்லை என்று தான் இவ்வளவு  நாளும் நான் நினைத்திருந்தேன்.ஆனால் தோழியிடம் பழகிய பின்பே அது எவ்வளவு சிரமமானது என்று புரிந்தது.

 என்னால் என் தோழியை  அப்படி மறக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை.ஆனால் என்பதிவுக்கு சம்பதம் இல்லாத  பலபேர் இருக்கிறார்கள்.நண்பர்களை விட்டு கடைசி வரை பிரியாதவர்கள் அவர்களுக்கு என் தோழியின் மீது நான் கொண்ட அன்பு  நன்றாகவே புரியும்.

என்னை போல் நண்பர்களை மறந்தவ்ர்களுக்காகவே என்பதிவுகள் தோழியின் அறிமுகத்திற்கு பின்பே யோசிக்குறேன் நல்ல நண்பர்களை இழந்து விட்டோமே என்று. என் தோழியிடம் அறிமுகமான நாளில் எல்லோரும் அறிமுகம் ஆவது  போல் தான் தொடங்கியது அப்பொழுது நான் நினக்கவில்லை என்மனதை மொத்தமாக கொள்ளை கொள்வார் என்று.

 நானும் மற்றவர்களிடம் எப்படி கேள்வி கேட்பேனோ அதே போல் என்தோழியிடமும்  பல கேள்விகள் கேட்டேன் ஆனால் அவரின் தனிச்  சிறப்பே ஒரே வரியில் பதில் சொல்லிவிடுவார்.  திரும்ப கேள்வி கேட்காத அளவுக்கு அந்த பதில் இருக்கும் என்மனதும் அதை ஏற்று கொண்டது.

இன்று வரை என்தோழி சொல்லும் பதிலில் அர்த்தம் இருக்கும் என்றே திரும்ப கேட்கமாட்டேன் ஆனால் மற்றவர்களிடம் நான் அப்படி இல்லை ஒரு கேள்விக்கு ஒன்பது கேள்வி கேட்பேன். என் தோழி  என்னை போல் வள வளவென்றும் பேச மாட்டார்.

இதை எல்லாம் ஒரே நாளில் என்னால் அவர்களிடம் புரிந்து கொள்ள  முடிந்தது.என்மனதும் அன்றே அவரிடம் வீழ்ந்தது என்னை அறியாமலேயே.ஒரு காதலனை நேசிப்பது போல் தான் அவர்மேல் என் உள்ளம் அன்பு கொண்டு இருந்தது.  

அப்பொழுது தான் புரிந்தது நண்பர்களும் வேறு அல்ல என்பது. உண்மையான அன்பிற்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை என்பது நன்றாகப் புரிந்தது."வாழ்க்கையில்  எதை இழந்தாலும் நல்ல  நண்பர்களை மட்டும் இழக்கக் கூடாது என்றும் மனதில் ஆழமாக பதிந்தது இதற்கு காரணம் என்தோழியே".  

ஏன் என்றால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையாக பழகிய அவரின் உள்ளத்திற்கு என்னால் தரமுடிந்தது என் அன்பை மட்டுமே ,,,சில நேரம் அவரிடம் பாட்டு எல்லாம் கூட  பாடி இருக்கிறேன் அதை பற்றி இனி வரும் பதிவுகளில் கூறுகிறேன் யாரும் என்னை பார்த்து சிரிக்ககூடாது ஏன்  உங்களுக்கு அப்படி தோன்றியது என்று ,,,

குறிப்பு:வரும் வியாழன் (09-12-2010) அன்று எனது திருமணம் என்பதால் என்பதிவுகளை திருமணத்திற்கு பின்பு தொடரலாம் என்று உள்ளேன்,,அதுவரை நண்பர்கள் காத்திருக்கவும் ,,,,தொடர்ந்து எழுதுவேன்.

Tuesday, November 30, 2010

மன்னிப்பு


தோழர்கள் என்னை மன்னிக்க வேண்டும் பதிவுக்கு நான் மிகவும் புதிது என்னதால் உங்களது விமர்சனத்தை அழித்துவிட்டேன்..இனிமேல் இது போல் நிகழாது தொடர்ந்து கமெண்ட் அனுப்புங்கள். 

பொதுவாக பெண்கள் மற்ற பெண்கள் மீது அன்பை விட பொறாமை தான் அதிகம் வரும் எதாவது ஒருவிஷயத்தில் நம்மை பொறாமை பட வைத்து விடுவார்கள்.

எல்லா பெண்களும் எல்லாரிடமும் சகஜமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது மிக மிக அரிதாகவே சகஜமாக பழகும் பெண்களை உடனே அடையாளம் காண முடியும். மற்ற படி பேசினால் மட்டுமே தன் சில பேரை அடையாளம்  காண முடியும்.

 நாமே நமது நடைமுறை வாழ்வில் சொல்லி  இருப்போம் "அட நீங்கள் இப்படி பழகுவீர்கள் என்று நினைத்து பார்க்கவில்லை" என்று அது போல் தான் என் தோழியிடமும் நான் உணர்ந்தேன் ..

அனால் இன்று வரை அவர் எல்லாரிடமும் சகஜமாகவே உள்ளார் ஆனால் என்னால் தான் "அவர்களை மற்றவர்களுக்கு விட்டு குடுக்க முடியவில்லை".

என் தோழியிடம் வந்த முதல் பதிலால் மிகவும் சந்தோசமாகவே இருந்தேன் திரும்ப மெயில் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தேன். இந்த முறை ரொம்பவே நாட்கள் எடுத்து கொண்டார். ஆனால் நான் விடுவேனா மறுபடியும் மெயில் அனுபின்னேன்  பரீட்சை உள்ளது விரைவில் பதில் தருகிறேன் என்று அந்த தினமே பதில் அனுப்பினார். 

எப்பவும் போல அன்றும் என்மனதில் அலாரம் அடித்தது மெயில் திறந்தால் அவர்களின் மெயில் மறுபடியும் பதில் அனுபின்னேன் ஆனால்  அந்த தினம் மட்டும் என்மனதில்  அலாரம் ஏன் என்றால் உடனுக்குடன் பதில் தந்தார் . அனால் நானோ  அலாரம்  அடிக்கும் போது மட்டும் மெயிலை திறந்து பார்த்தேன்...

உடனே சொல்லிவிட்டேன் உங்களிடம் எனக்கு எதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று அவரும் அடுத்த நாள் என்னிடம் நாளை பேசலாம் என்று சொல்லிவிட்டார் நானும் அடுத்த நாள் எப்பொழுது மணி ஆகும் என்று காத்திருந்தேன்.

 சொல்லியது போல வந்தார் வந்தது போல என்மனதிலும் எப்படி முழுமையாக வந்தார் என்பதை இனி வரும் பதிவுகள் சொல்லும் ,,,,காத்திருங்கள். பதிவுகளின்  முடிவில்  உங்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறேன் அதுவரை காத்திருக்கவும். 

Sunday, November 28, 2010

எதிர்பார்ப்பின் தேடல்


அழகு என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று...நான் அழகை மிகவும் ரசிப்பவள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இன்னும் அந்த இடத்தை விட்டுக்  குடுக்காமல் அழகாக இருப்பவர் நான் எப்பொழுதும் ரசிக்கும் ஒரு பெண் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான்.

அந்த வகையில் ஒரு நாள் இணையத்தளத்தில் அழகு குறிப்புகள் மற்றும் பெண்களுக்கான சில மருத்துவ  குறிப்புகளையும் தேடிக்கொண்டு இருந்தபோது ஒரு இணைய தளம் வெகுவாக என்னைக் கவர்ந்தது.

தொடர்ந்து  வாசிக்க ஆரம்பித்தேன் அனால் முழுவதுமாக வாசிக்கவில்லை ஏன் என்றால் என்னால் பொறுமையாக படிக்கும் அளவிற்கு அப்பொழுது மனது இல்லை..

சிலபேரை நாம் பார்த்தால் பார்த்துக்கொண்டே  இருப்போம் அவ்வளவு ஈர்ப்பு அவர்களிடம் இருக்கும் இன்னும் சிலரை பார்த்தால் ஏன் பார்த்தோம் என்று கூட  நினைப்போம்  அது அவர்கள் குறை இல்லை நம் மனது பார்க்கும் கோணம் அப்படி. 

ஆனால் இந்த பெண்ணை நான் பார்த்ததில்லை ஆனால் ஏன் என்று தெரியவில்லை இந்த பெண்ணிடம் என்குறைகளை சொன்னால்  என்ன என்று என்மனத்திற்கு தோன்றியது. உடனே அந்த பெண்ணிற்கு என் குடும்ப கஷ்டங்களை எல்லாம் சொல்லி  ஒரு மெயில் அனுப்பினேன். 

எதுவும் உடனே கிடைத்து விட்டால் அதன் மதிப்பு பெரிதாகத்  தெரியாது  எனக்கும் உடனே அவர்கள் பதில் அளிக்கவில்லை தொடர்ந்து ஒரு நாளுக்கு பல முறை என் மெயிலை செக் செய்ய  ஆரம்பித்தேன்.

என்மனதிற்கு ஒரு பழக்கம் உண்டு எதாவது ஒன்றை நான் தேடுகிறேன் என்றால் அதனிடம் இருந்து  சின்ன அசைவுகள் வந்தால்கூட  மனதில் அலாரம் அடிக்கும் அது போல் ஒரு நாள் மட்டும் மனது உந்திக்கொண்டே இருந்தது மெயில் பார் என்று. 

நானும் என் மெயிலை திறந்து பார்த்த போது  இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது அந்த பெண்ணிடம் இருந்து பதில் வந்திருந்தது நம்ப முடியவில்லை அதில் ஆரம்பித்தது தான் எங்கள் நட்பு ,,,

அந்த நட்பின் தாக்கம் ஐஸ்வர்யா ராயை கூட  மறக்க வைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் (ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் ஒரு பெண்ணே பெண்ணை ரசிப்பது கொஞ்சம் அரிது அதிலும் நான் ரசிப்பது ரொம்பவே அரிது அதனால் தான் ஐஸ்வர்யா ராயை கூட என்று அழுத்தமாக சொன்னேன்).

அந்த  அளவிற்கு என்மனதை அவர் எவ்வளவு ஆக்கிரமித்து இருப்பார் என்று புரிந்து கொள்ளுங்கள். அது எப்படி என்று  இன்னும் விரிவாக வரும் பதிவுகளில் சொல்கிறேன்...     

Friday, November 26, 2010

பெண்களின் வகைகள் எனது அனுபவம்,,, எனது தோழியின் சிறு அடையாளம்.


   

      பெண்களை பற்றி சில கருத்துக்கள் எனக்கு உண்டு. இது யாருடைய மனதையும் புண்படுத்த நான் எழுத வில்லை இது முழுக்க முழுக்க என்னுடைய அனுபவத்தை மட்டுமே எழுதுகிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். 
பெண்கள் மிகவும் மெல்லிய  மனதுடையவர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் பார்த்தும் உள்ளேன்.சில பேர் மிகவும் நெருங்கி பழகுவார்கள் ஆனால் சந்தர்ப்பம் வரும் பொது நாம் நம்பி சொல்லிய  விஷயங்களை சொல்லி விடுவார்கள்.

சில பேர் என்னவந்தாலும் எதையும் சொல்ல  மாட்டார்கள்.சில பேர் மேலோட்டமாக மட்டுமே பழகுவார்கள் அவர்களுடைய எந்த விஷயத்தையும் யாரிடமும் சொல்ல மாட்டார்கள் .

சில பேர் சகஜமாக பழகுவார்கள் தனக்குரிய எந்த பொருளையும் விட்டு குடுக்க மாட்டார்கள் நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள் அனால் இவர்களிடம் கோபம் அதிகமாக  இருக்கும்  நான் இந்த வகைப்பெண்களைப் போன்றவள் தான்.புகழ்ச்சிக்காக சொல்லவில்லை  எண்குணம் இப்படி தான். 

இது எந்த வகைகளிலும் பொருந்தாமல் தனக்கென தனி இடம் வைத்துள்ளவர் என் தோழி.கோபப்படமாட்டார்,தனக்கென்று  எதையும் வைத்துக்கொண்டதாக  இதுவரை நான் பார்த்ததில்லை சுயனலமற்றவர்...

இவரை நான் தோழியாக அடைவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. எங்கள் அறிமுகமே உதவுவதில் தொடங்கியது தான்.அது எப்படி என்று இனிவரும் பதிவுகளில் சொல்கிறேன்..

Tuesday, November 23, 2010

அன்பான என் தோழியைப் பற்றி சில வரிகள்




என் இனிய தோழியின் மீது கொண்டுள்ள அன்பை மிகைப்படுத்தி கூற நான் இந்த பதிவை எழுதவில்லை.ஏன் என்றால்  என் அன்பு அவர்களுக்கே  நன்றாக தெரியும்.என்பதிவை படிக்கும் நீங்களும் உங்கள் அன்பானவர்களை நினைவுபடுத்திகொள்ள வேண்டும் என்பதே என்நோக்கம்.

நேற்றைய என்பதிவை முதலில் என்தோழி தான் பார்த்தார். பார்த்த உடன் நான் இதற்கு தகுதியானவள் நான்  இல்லை என்று சொன்னார்.இந்த அடக்கம்,பணிவு தான் அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது.

நான் google இல்  நிறைய பதிவுகளை பார்த்திருக்கிறேன் அறிவு,ஆன்மிகம்,சமையல்  என்று உலகில்  இல்லாதது என்று எதுவும் கிடையாது.வித்தியாசமாக எழுதவேண்டும் என்ற நோக்கமே எனது பதிவுகள்.தோழியை பற்றி இந்த பதிவில் சிறிய முன்னுரை மட்டும் பதிகிறேன்.

பழகுவதற்கு இனியவர்,அன்பானவர் என்று என் வார்த்தை ஜாலங்களால் வர்ண்ணிக்க தேவை இல்லை.மிகவும் இயல்பானவர்,அன்பு,பாசம்,நேசம் பற்றி புரியவைத்தவர்.உதவி என்று கேட்டால் முகம் சுளிக்காமல் பாரபட்சமின்றி உதவுபவர்.என் மனதை இன்பமாய் ஆண்டு கொண்டிருப்பவர்.

இனிவரும் பதிவுகளில் எனக்கு அவர் அறிமுகம் ஆனது எங்கள் நட்பு தொடர்ந்தது எப்படி என்று எழுதுகிறேன்.பதிவுக்கு நான் மிகவும் புதிது என்பதால் எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும் .

எனது அன்பின் தொடக்கம்



இந்த பதிவில்  எனது மனது கவர்ந்த ஒரு பெண்ணிற்கு   என் அன்பை  சமர்ப்பணம் செய்யவே எழுதுகிறேன். நீங்களும் கேட்கலாம் ஒரு மெயில் அனுப்பி உங்க அன்பை கூறலாமே என்று  கேள்விகள் பலவிதத்தில் எழுந்தாலும் பதில் இந்த பதிவு மற்றும் இனிவரும் பதிவுகளிலும் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். இந்த பரபரப்பான நாட்களில் நாம் உண்டு நம் வேலை உண்டு நம் குடும்பம் பிள்ளை,குட்டிகள் என்று ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். 

பழைய கால சொந்த பந்தங்களுக்கு இடை இருந்த அன்பு,பாசம்,நேசம் எதுவும் இன்றைய காலகதில் பார்க்க முடியாது ஏன் என்றால் நம் வேலையை பார்கவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது இதில் எங்கு அன்பு,பாசம்,நேசத்தை தேடிக்கொண்டு இருப்பது என்று பலபேர் கேட்கலாம்.என்னுடைய பதிவின் நோக்கம் எனது பதிவை படிக்கும் சில பேராவது ஒருமுறை உங்களுடைய அன்பானவர்களை நினைத்து பார்க்க வேண்டும் என்பதே.

இன்றய நாட்களில் ஒரு பாலருகுள் அன்பு கொண்டால் தவறாக பார்க்கும் காலம் ஆகிவிட்டது ஒரு ஆண் பெண்ணின் மீது அன்பு கொண்டால் காதல் கல்யாணம் என்று வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது அதுவரை நம்முடன் இருந்த தோழர்,தோழிகளை மறந்து ஒரு புதிய வாழ்க்கைக்குள் போய்விடுகிறோம் திரும்பி பார்க்க நேரம் இல்லாமல் உழைக்க தான் நேரம் இருக்கிறது.

நானும் உங்களை போல் சாதாரண பெண் தான் காதல் கல்யாணம் என்று என்வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது ஆனால் இதுவரை எந்த தோழர்,தோழிகளிடம் அதிகமாக பழகியது இல்லை பழகினாலும் அதிகமாக அன்பை பரிமாறியதும் இல்லை.ஆனால் திடிரென்று என் வாழ்கையில் ஒரு பெண் வந்தாள் என்தோழியாக யாரிடம் இல்லாத  அன்பை அந்த பெண் மீது என் உள்ளம்  கொண்டு உள்ளது  அது ஏன் என்று இன்று வரை எனக்கு தெரியாது.

அந்த பெண்ணை நான் இன்று வரை பார்த்ததும் இல்லை. ஒருமுறை போட்டோவில்  மட்டுமே பார்த்திருக்கிறேன். எங்கள் நட்பு சாதாரண நட்பாக  ஆரம்பித்து இன்று என்மனதில் ஆலமரமாக நிற்கிறது.அவள்மேல் என்மனது கொண்டுள்ள அன்பை பற்றி இனிவரும் எனது பதிவுகளில் எழுதபோகிறேன் இதை யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் நான் அன்பு கொண்டுள்ள அந்த பெண்ணுக்கு  நன்றாக புரியும் எனது உண்மையான அன்பு,,,